முக்கியச் செய்திகள் தமிழகம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்புவது பரிசீலனையில் உள்ளது: அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் அப்பாவு இன்று நேரில் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் உரையாற்ற ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விருப்பு, வெறுப்பின்றி, அனைத்து உறுப்பினர்களும் பேசுவதற்குச் சம வாய்ப்பு வழங்கப்படும். நீட் தேர்வு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றுகூட பிரதமர் மோடியிடம் நீட் தேர்விலிருந்த தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என பேசியுள்ளார். தமிழ்நாட்டில் விரைவிலேயே நீட் தேர்வு குறித்து ஒரு நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது தொடர்பாக வரும் 21-ம் தேதி அலுவல் ஆய்வுக் குழு ஆலோசனைச் செய்து எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்பதை முடிவுச் செய்து பின்னர் அறிவிக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் – விஜய் வசந்த்

Gayathri Venkatesan

பிரபல தாதா சோட்டா ராஜன் உடல்நிலை விவகாரம்: மருத்துவமனை மறுப்பு

Halley Karthik

திமுக அரசு செய்தது என்ன? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Ezhilarasan