முக்கியச் செய்திகள் தமிழகம்

எத்திக்கும் பரவும் தமிழர் புகழ்: யார் இந்த ராஜகோபால் ஈச்சம்பாடி?

கடந்த இரு தினங்களாகவே இணையப் பக்கங்களில் அதிகம் தேடப்பட்ட ஒரு பெயர் ராஜகோபால் ஈச்சம்பாடி.

அமெரிக்காவின் இல்லியானாய்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள ராஜகோபால் அடிப்படையில் ஒரு தமிழர் என்பதுதான் இந்த தேடுதலுக்கு முக்கிய காரணம். உலகம் எங்கும் தொடர்ந்து ஒடுக்குமுறையை சந்தித்தாலும், எல்லா ஒடுக்குமுறைகளையும் தகர்த்து, சர்வதேச அளவில் சாதனை படைத்து வரும் தமிழர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார் ராஜகோபால்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமெரிக்காவின் துணை அதிபராக கமலாஹாரிஸ் பொறுப்பேற்ற நிலையில், அமெரிக்க உயர் பதவிகளில் தமிழர்கள் பலர் அமர்த்தப்பட்டனர். அப்படி, இல்லியானாய்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 10வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ராஜகோபால்.

அமெரிக்க துணை அதிபரின் சொந்த ஊரான திருவாரூரை சேர்ந்த ராஜகோபால், 53 வயது நிரம்பியவர். சென்னை தியாகராய நகரில் உள்ள ஷெரின் வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளியிலும், மயிலாப்பூரில் சாந்தோம் உயர்நிலை பள்ளியிலும் கல்வி பயின்ற ராஜ கோபால், 1985-89 ஆண்டில் கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் கல்வியை முடித்தார். தொடர்ந்து முதுகலை மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றவர், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பை நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்தே, அமெரிக்காவின் இல்லியானாய்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராஜகோபால், வரும் ஆகஸ்ட் 16ல் பதவியேற்க உள்ளார்.

131 வருட பாரம்பரியமிக்க இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம், பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கிய பெருமைமிக்கது. அந்த பல்கலைக்கழத்திற்கு ஒரு தமிழர் தலைவராக தேர்வு செய்யப்படுவது அத்தி பூத்தது போல கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு.ஒரு மாநிலத்தின் பல்கலைக்கழகத்துக்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமிப்பதற்கே பல்வேறு தடைகளையும் சிக்கலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், நிறவெறியில் ஊறிப்போன ஒரு நாட்டில், வேறு நாட்டை சேர்ந்த ஒருவர் பல்கலைக்கழக தலைவராக தேர்வு செய்யப்படுவது வரலாற்று நிகழ்வு.

வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவரை துணைத் தலைராக ஏற்க பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது இக்காலத்தில். நிறவெறியில் ஊரிப்போன ஒரு நாட்டில் வேறு நாட்டை சேர்ந்த ஒருவர் ஒரு துறைக்கு தலைவராக தேர்வு செய்யப்படுவது வரலாற்று நிகழ்வுதானே. யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று பாடிய கணியன் பூங்குன்றனாரின் வார்த்தையை மெய்ப்பிக்கும் பேராசிரியர் ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாசுகி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தெலங்கானாவில் கனமழைக்கு வாய்ப்பு

Vandhana

மகாராஷ்டிரா அரசியலில் மேலும் ஒரு திருப்பம் – முதல்வராகிறார் ஏக்நாத்

Web Editor

பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது- உயர்நீதிமன்றம்

G SaravanaKumar