முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெயலலிதா உரையுடன் முதலமைச்சர் வெளியிட்ட சிறப்பு மலர்

முதலமைச்சர் வெளியிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு மலரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2021 ஆகஸ்ட் 2ம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். இந்த நிகழ்விற்கான சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வு சட்டமன்ற அரங்கில் இன்று நடைபெற்றது. சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார். அதில் சட்டமன்ற நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர், பிரதமர், முக்கிய தலைவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள், சட்டமன்றத்தின் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

அண்ணா, குடியாட்சி முறை என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும், புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு, மாப்பிள்ளையும் மாப்பிள்ளை தோழனும் தலைப்பில் அண்ணா கடந்த 30.04.1957 அன்று சட்டப்பேரவையில் ஆற்றிய முதல் உரையும் மலரில் இடம் பெற்று இருக்கிறது.

தியாகத்தை போற்றிடுவோம் என்ற தலைப்பில் சட்டப்பேரவையில் 14.08.1972 ஆம் ஆண்டு விடுதலை நாள் வெள்ளி விழாவில் பேசியது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12.05.2021 அன்று சட்டமன்ற ஜனநாயகம் பேணி பாதுகாப்போம் என்ற தலைப்பில் பேரையில் ஆற்றிய முதல் உரையும் உள்ளது. இதுபோலவே, கடந்த 10.10.2012 அன்று பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அருந்ததியர் சமுதாயம் சார்ந்த முதல் பேரவைத் தலைவர் தனபால் என்று அவரை பாராட்டி பேசியதும் இடம் பெற்று இருக்கிறது.

இதேபோல முன்னாள் முதலமைச்சர்கள் காமராசர், பக்தவச்சலம், எம்.ஜி.ஆர் ஆகியோரின் உரைகளும், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற குறித்த தீர்மானம் உள்பட சட்டப்பேரவையில் இடம் பெற்ற வரலாற்று சிறப்பு நிகழ்வுகளும், தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மலரில் இடம் பெற்று உள்ளது. நூற்றாண்டு கண்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள், சட்டங்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலும், 16வது சட்டமன்ற பேரவையின் அமைச்சரவை தகவல்களும் மலரில் தொகுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நாகர்கோவிலில் நாளை அமித்ஷா தேர்தல் பரப்புரை!

Niruban Chakkaaravarthi

பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும்; பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

Saravana Kumar

நடிகர் யோகிபாபு குடும்பத்துடன் சாமி தரிசனம்

Gayathri Venkatesan