சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் தவனை செலுத்த கால அவகாசம் வழங்கவேண்டும் என பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த மே 9-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பிரதமருக்கும், ஆர்பிஐ ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கால்டாக்ஸி, ஆட்டோரிக்ஷா, சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் தவனை செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்கவேண்டும் எனவும் அவகாசம் வழங்கும் பட்சத்தில் அதற்கு வட்டி வசூலிக்க கூடாது என அதில் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.







