கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள சிப்கார்ட் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலைகளில் ஒன்றான பூச்சி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இன்று காலை இந்தத் தொழிற்சாலையில் செயல்படும் இயந்திரம் திடீரென வெடித்தது. இதனால் தொழிற்சாலை முழுவதும் தீ பரவி, புகை மண்டலமானது. இங்கு பணியிலிருந்த ஊழியர்கள் அனைவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உள்ளே சிக்கிக்கொண்டிருந்த நபர்களை வெளியே கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 3 பேர் உயிழிந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்து ஏற்படக் காரணங்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்