முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா: பொது சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் 70 % பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது;

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“கொரோனா பாதிக்கப்பட்ட 554 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களில் 70% சதவிகிதம் பேருக்கு டெல்டா (B.1.617.2) வகை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது தெரியவந்தது. இரண்டாம் அலையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதற்கு டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் காரணம் என ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 18.9% பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 13 வயது முதல் 17 வயது வரை உள்ள இளம்பருவத்தினரில் 3.4% பேரும், 18 முதல் 44 வயது வரை உள்ள இளைஞர்களில் 46.1% பேரும், 45 வயதுக்கு மேற்பட்டோர் 31.6% பேரும் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறையின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரமாண்டமாக தொடங்குகிறது உலக கோப்பை ஆடவர் ஹாக்கி

Jayasheeba

சென்னை நாள் கொண்டாட்டம் – பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்பு

Dinesh A

குறையும் கொரோனா: பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள்!

Halley Karthik