தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களை திமுக கூட்டணி வெற்றிபெற்றது. இதனையெடுத்து கடந்த 7-ம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

மேலும் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் இன்று கலைவாணர் அரங்கியல் நடைபெற்ற 16-வது சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டப்பேரவை உறுப்பினர்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார்.
அவரை தொடர்ந்து சட்டப்பேரவையின் மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அகர வரிசையின் படி பதவியேற்றுக்கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்க அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 66 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 18 பேர், பாமகவைச் சேர்ந்த 5 பேர், விசிக 4 பேர், பாஜக 4 பேர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலா 2 உறுப்பினர்களும் இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாகச் சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள், உடல் நலம் சீரானதும் பதவியேற்றுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.







