இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

ஸ்டாலின் முதல்வராகி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கூடுகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி முதல்வராகப்…

ஸ்டாலின் முதல்வராகி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கூடுகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்கொண்டனர். முதல்வரின் தனிச் செயலாளர்களாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மேலும் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் புதிய எம்.எல்.ஏக்கள், தற்காலிக சபாநயாகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள், உடல் நலம் சீரானதும் பதவியேற்றுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.