திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.2 கோடி காணிக்கை வசூல்!

முருகனின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  முருகனின் அறுபடை வீடுகளில்…

முருகனின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

முருகனின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணி கோயில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகன் கோயில்களில் தைப்பூசம், கிருத்திருகை போன்ற நாட்களில் விஷேச வழிபாடு நடைபெறும்.

இதையும் படிக்கவும்: குரூப்2 தேர்வில் தாள் 2ன் மதிப்பெண்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்- டிஎன்பிஎஸ்சி

அதன்படி திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 20 நாட்களாக பல்வேறு விழாக்கள் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாசி மாதம் கிருத்திகை தினம் கொண்டாடப்பட்டது. மாசி மாதம் வரும் கிருத்திகை தினம் முருகனுக்கு உகந்த தினமாகும். எனவே இந்த நாளில் பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு செல்வர். இந்த மாசி கிருத்திகை ஞாயிற்றுக்கிழமை வந்ததால் வழக்கத்திற்கு மாறாக கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி மலைக்கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துவது வழக்கம். அதன்படி திருத்தணி முருகன் கோயில், உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். அதனை திருக்கோயில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் ஊழியர்கள் & தற்காலிக பணியாளர்கள், ஆகியோர்கள் திருக்கோயில் துணை ஆணையர் பா.விஜயா முன்னிலையில் எண்ணினர்,

அதன்படி,  ஒரு கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரூபாயும், 612 கிராம் தங்கமும், 10,487 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பக்தர்கள் உண்டியலில் செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.