திருப்பூரில் தொல்பொருள் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு ரசித்த மாணவிகள் பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருட்களை வியப்புடன் கண்டு ரசித்தனர்.
திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை சார்பாகத் தொல்பொருள் கண்காட்சி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கண்காட்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய மக்கள் பயன்படுத்திய குறியீடு உடைய பானை ஓடுகள், இரும்பு உருக்கு உதுலை சுடுமண் குழாய்கள், துளையுடன் கூடிய சிறு சக்கரம், மண்கலங்கள், கல்மணிகள், சங்குகள், ஆயுதமாகப் பயன்படுத்திய கற்கள், புகைப்பான் உள்ளிட்ட ஏராளமான பண்டைய மக்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பண்டைய பொருட்கள் குறித்து வரலாற்றுத் துறையினர் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். மாணவிகள் பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருட்களை வியப்புடன் கண்டு ரசித்தனர்.
-வேந்தன்