அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் தீயில் கருகி நாசம்; வருத்தத்தில் விவசாயிகள்

குளித்தலை அருகே பாப்பாயம்பாடி கிராமத்தில் சாகுபடி செய்திருந்த கரும்பு அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கரும்பு தோட்டம் மின் கம்பி உரசி தீ பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.  கரூர்…

குளித்தலை அருகே பாப்பாயம்பாடி கிராமத்தில் சாகுபடி செய்திருந்த கரும்பு அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கரும்பு தோட்டம் மின் கம்பி உரசி தீ பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பாப்பாயம்பாடி ஊராட்சி பகுதியில் தனபால், மாணிக்கம், பாண்டியன் ஆகியோர்களது விவசாய தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்து அறுவடைக்குத் தயாராக இருந்தது.

இந்நிலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கரும்பு தோட்டத்தில் மின் கம்பி
உரசி தீப்பிடித்ததாகத் தெரிவிக்கின்றனர், இத்தகவல் தெரிந்து பொதுமக்கள் மற்றும்
விவசாயிகள் கரும்பு தோட்டத்திற்கு வருவதற்குள் தீ பற்றி மல மலவென எரிய
தொடங்கியது.

அங்கிருந்த பொதுமக்கள் கரூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல்
தெரிவித்த பின், பொதுமக்களே தீயை அணைக்க முற்பட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கரூர் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர்.

கரும்பின் சேத மதிப்பு சுமார் 12 லட்சம் இருக்கும் என தெரிவிக்கின்றனர், விவசாயிகள் காப்பீடு செய்து இருந்தால் இழப்பீடு கிடைக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். மின் கம்பி உரசி தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது, இது தொடர்பாக லாலாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.