புத்தாண்டை முன்னிட்டு, ஜோலார்பேட்டை ஸ்ரீவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் 7 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு 20 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் அனைவரும் அதிகாலை முதலே சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு ஆராதனை வழங்கப்படுகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியில்
அமைந்துள்ளது ஸ்ரீவீர ஆஞ்சநேயர் ஆலயம். புத்தாண்டை முன்னிட்டு, பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் 7 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு 20 லட்சம்
ரூபாய் மதிப்புள்ள பண நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.







