திருப்பதி கோயில் உண்டியலில் திருடிய ஊழியர் கைது!

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த ஊழியர் 72 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை திருடிய போது கையும், களவுமாக பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை…

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த ஊழியர் 72 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை திருடிய போது கையும், களவுமாக பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக கோடிக்கணக்கான ரூபாய்களையும்,தங்கம்,வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்புடைய பொருட்களையும் அளித்து வருகின்றனர்.திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோவில் நிர்வாகம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறது.

கோயில் உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள்,வங்கி அதிகாரிகள்,ஓப்பந்த ஊழியர்கள் என பல தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியரான ரவிக்குமார் என்பவர் வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய நடவடிக்கைகள் சந்தேகமாக இருந்ததால் விஜிலென்ஸ் துறையினர் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்தனர்.

எனவே அவரை நிறுத்தி சோதனை செய்தப்போது அவர் தன்னுடையை உடமைகளுக்குள் காணிக்கை பணம் 72 ஆயிரம் ரூபாயை திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது.இதுகுறித்து விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.