நெல்லை அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! விவசாயிகள் வேதனை!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளான பெரியகுளம் பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்து காட்டுபன்றிகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மதிப்புடையை…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளான பெரியகுளம் பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்து காட்டுபன்றிகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மதிப்புடையை வாழைத்தார்களை சேதப்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.ஏற்கனவே பருவ மழை பொய்த்து போனது, உரிய விலை இன்மை போன்ற காரணங்களினால் இன்னல்களை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு தற்போது காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

நேற்றிரவில் அங்குள்ள வாழைத்தோட்டங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் சுமார் 600க்கும் மேற்பட்ட ரககதலி ரக வாழை மர குருத்துக்களை தின்று சேதப்படுத்தி உள்ளது.இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேல் இருக்கும்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மாணிக்கம் என்பவர் கூறுகையில் அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.மேலும் காட்டுப்பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.