கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை திருவிழாவாக 10 நாட்களுக்கு கொண்டாடி வருகின்றனர் மதுரை மக்கள். கள்ளழகர் பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களில் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அழகரின் ஆடைகள் மற்றும் அலங்கார பொருட்கள் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். அந்த பெட்டியில் பல நிறங்களில் உடைகள் இருக்கும். எந்த நிற உடை கோயில் தலைமைப் பட்டரின் கையில் படுகிறதோ அன்று அந்த நிற உடையை அழகருக்கு உடுத்துவர். அழகர் உடையின் நிறத்தை பொறுத்து, அந்த வருடத்திற்கான நல்லது – கெட்டதை மக்கள் முடிவுசெய்வது ஒரு ஐதிகமாக கருதப்பட்டு வருகின்றது.
பச்சை பட்டு: அந்த வருடத்தில் இயற்கை வளம் செழிப்பாகவும் மற்றும் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.
மஞ்சள்: அந்த வருடத்தில் நிறைய மங்களகர நிகழ்வுகள் நடைபெறும்
வெண்பட்டு: நாட்டில் வன்முறைகள் மற்றும் கலவரங்கள் குறைந்து நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும்
சிவப்பு: நாட்டில் போதிய விளைச்சல் மற்றும் மக்களிடையே அமைதியின்மை போன்ற பல பிரச்னைகள் தோன்றும் போன்ற நம்பிக்கைகளை மக்கள் ஐதிகமாக கொண்டுள்ளனர்.
ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன நிறப் பட்டு உடுத்தி வருவாரோ என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள்.
– சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







