முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் மாசித் திருவிழா! – பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா இன்று காலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலகப்புகழ் பெற்ற இத்திருக்கோயில் மாசித்திருவிழாவில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மேலும் விஸ்வரூப தரிசனம் மற்றும் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : டிஎன்பிஎல் ஏலம் – அதிக தொகைக்கு தேர்வான டாப் 10 வீரர்கள் பட்டியல்

கொடிபட்ட ஊர்வலத்துடன் திருவிழா தொடங்கிய நிலையில் ரத வீதிகளில் யானை மீது கொடிப்பட்ட ஊர்வலம் நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து 3ம் தேதி சிகப்பு சாத்தி கோலத்திலும், 4ஆம் தேதி பச்சை சாத்தி கோலத்திலும் சண்முகர் காட்சி அளிக்கிறார். தொடர்ந்து 6ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும், 7ஆம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியீடு

G SaravanaKumar

42 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்கள் – மாணவர்கள்; நெகிழ்ச்சி தருணம்

G SaravanaKumar

10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்

Vandhana