30.9 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

இறந்தது போல் நடித்து சவக்குழி வரை நாடகமாடிய TikToker ! அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தினர்

45 வயதான ஒருவர் தனது மரணத்தை போலியாக உருவாக்கி, பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து தனது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

பொதுவாக குடும்பம் என்பது இரத்த உறவாலோ அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்புபட்ட ஓர் உறைவிடக் குழுவாகும். அப்படிப்பட்ட இந்த உறவில் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பு காட்டி எல்லா வகையிலும் அனுசரணையுடன் இருக்கவும், துயரம் வரும் போது தோள் கொடுக்கத் தயாராக இருக்கும்போது நல்லதொரு குடும்பம் உருவாகிறது. அதே தனி மனிதனுக்குச் சுயநலம் மேலோங்கும் போது அந்தக் “குடும்பம்” என்ற அழகான கூடு குலைந்து போகிறது இன்றைய காலகட்டத்தில் இது தொடங்கி விட்டதோ என்ற உள்ளூர ஒரு எண்ணம் அவ்வப்போது தனிமையை உணரும் பலருக்கும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குடும்பம் தான் சமுதாயத்தின் அடிப்படை அழகு. அது நன்றாக வலுவாக இருக்க வேண்டும் என்று அன்றே கவிஞர் கண்ணதாசன் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று வரிகளால் வடித்து நமக்கெல்லாம் வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்லிவிட்டு போயிருப்பார். இது கூட்டுக்குடும்பமாக வாழ நினைபவர்களுக்கு மட்டுமல்ல அன்பை தேடும் அனைவருக்குமே பொருந்தும்.

அப்படிதான் உறவுகள் இருந்தும் தனிமையில் இருப்பதாக நினைத்த பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் டேவிட் பேர்டனுக்கும் தோன்றியுள்ளது. 45 வயதான இவர் மனைவி, குழந்தைகள் இருந்த போதிலும் தனிமையில் வாழ்வதாக உணர்ந்துள்ளார். தன் குடும்பத்தை சேர்ந்தவர்களே தன்னை முழுமையாக நேசிக்க வில்லை என்று மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இருந்தும் அவர்களை எப்படியாவது மாற்றி ஒரு உறவு நம்மை விட்டு பிரிந்தால் எபப்டி இருக்கும் என்பதை காட்டவும், நமது குடும்பத்தில் யார்தான் தன் மீது மிகுந்த அன்புடன் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவும் முடிவு செய்து அதற்காக தான் இறந்தது போன்ற போலியான மரணத்தை உருவாக்கி, அதன் மூலம் தனது குடும்பத்தினருக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என்று நினைத்துள்ளார்.

அதற்காக டேவிட் பேர்டன் தான் இறந்து கிடப்பது போல் நாடகமாடியுள்ளார். அவரது குடும்பத்தினரும் அவர் இறந்துவிட்டதாக நம்பி உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த வார இறுதியில் லீஜ் நகருக்கு அருகில் நடந்த இந்த போலியான இறுதிச் சடங்கில், டேவிட் பேர்டனின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோர் கருப்பு உடையில் கலந்து கொண்டனர்,

அப்போது, டேவிட் பேர்டனின் இறுதிச்சடங்குகள் முடிந்து அவரது உடல் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட சவப்பெட்டியை குழிக்குள் இறக்கும் போது, அருகில் இருந்த வயல் வெளியில், ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த ஹெலிகாப்டரை பார்க்க அதில் இருந்து டேவிட் பேர்டன் இறங்கி வந்துள்ளார். அவர் இறங்கி வருவதை கண்ட அவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் சிலரும் உயிரோடு இருக்கிறார் என்ற மகிழ்ச்சியில் ஓடிச்சென்று அவரை கட்டி பிடித்து தங்களது அன்பை வெளிப்படுத்த சாலையில் வாகன நிறுத்துமிடத்தில் நின்றிருந்த மற்றவர்கள் சிலர் இங்கு என்ன நடக்கிறது என்பது புரியாமல் குழப்பமடைந்துள்ளனர். மேலும் சிலர் டேவிட் பேர்டனின் இந்த செயலை விமர்சனம் செய்தனர்.

தான் ஏன் அவ்வாறு நடந்துகொண்டேன் என்று விளக்கமளித்த டேவிட் பேர்டன் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தன்னை நடத்தும் விதத்தில் மகிழ்ச்சியடையாததால் தான் அவ்வாறு செய்ததாக கூறினார். மேலும் எனது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னிடம் நடந்துகொள்ளும் விதம் என்னை அடிக்கடி காயப்படுத்துகிறது,. நான் எதற்கும் அழைக்கப்படுவதில்லை. யாரும் என்னைப் பார்ப்பதில்லை. நாங்கள் அனைவரும் பிரிந்து வளர்ந்தோம். நான் பாராட்டப்படாதவனாக உணர்ந்தேன். அதனால்தான் நான் அவர்களுக்கு ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கொடுக்க விரும்பினேன். நமது மனதிற்கு நெருக்கமானவர்களை, நமக்கு பிடித்தவர்களை என்ன கோபம் இருந்தாலும் நேரில் வந்து சந்திக்க, அவர்கள் இறக்கும் வரை யாரும் காத்திருக்கக்கூடாது என்பதைக் உணர்த்த விரும்பியே இதுபோன்று நடந்துகொண்டேன் என்று விளக்கம் அளித்தார்.

இந்த சமயத்தில் டேவிட் பேர்டனின் குழந்தைகளில் ஒருவர் தனது தந்தையின் “இறப்பு” பற்றிய செய்தியை பிறருக்கு தெரியப்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் தனது தந்தைக்கு இரங்கல் பதிவு ஒன்றை எழுதி பதிவிட்டிருந்துள்ளார். அதில் அமைதியாக இருங்கள் அப்பா. நான் உன்னைப் பற்றி நினைப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன். “வாழ்க்கை ஏன் மிகவும் நியாயமற்றதாக உள்ளது என்று தெரியவில்லை. நீங்கள் ஒரு தாத்தாவாக இருக்கப் போகிறீர்கள். இன்னும் உங்கள் முழு வாழ்க்கையையும் உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். நான் உங்களை காதலிக்கிறேன். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று எழுதி பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஏறக்குறைய 165,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட டேவிட் பேர்டன், தனது மரணம் குறித்தது குழந்தைகளின் மனதை உருக வைக்கும்படியான பதிவு, குடும்ப நண்பர்கள் தனக்காக நேரில் வந்து கண்ணீர் விட்டு அழுதது ஆகியவை தன்னை மிகவும் நெகிழ்வைத்ததாக கூறியது மட்டுமின்றி சில அன்பானவர்கள் தன்னைத் தொடர்புகொள்வதாகக் கூறி “யார் என்னைப் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார்கள் என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நிரூபணமாகியிருப்பதாக கூறியுள்ளார்.

தற்போது இறுதிச் சடங்கின் முழு வீடியோவையும் Baerten இன்னும் வெளியிடாத நிலையில், மற்றொரு TikTok பயனர் ஹெலிகாப்டர் தரையிறங்கியதும், ஒருவர் கண்ணீருடன் சென்று கட்டிப்பிடித்து அழிவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுளளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading