எருமையைத் தாக்கும் புலி: காப்பாற்றும் பிற எருமைகள் – வைரல் வீடியோ

நீலகிரி எல்லையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வனப்பகுதிகளில் வளர்ப்பு எருமையைத் தாக்கும் புலியை பிற எருமைகள் தாக்கிக் காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள்…

நீலகிரி எல்லையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வனப்பகுதிகளில் வளர்ப்பு எருமையைத் தாக்கும் புலியை பிற எருமைகள் தாக்கிக் காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகிய இரண்டு வனப்பகுதிகளும் ஒன்றிணைந்த தொடர் வனப்பகுதி ஆகும். இந்த வனப்பகுதிகளில் ஏராளமான புலிகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் நுழைந்து மேய்ந்து கொண்டிருந்த வளர்ப்பு எருமைகளை புலி ஒன்று தாக்கியது. அப்போது சில எருமைகள் புலியைத் தாக்கி விரட்டி காயம்பட்ட எருமையைக் காப்பாற்ற பல்வேறு போராட்டங்கள் நடத்துகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.