பாபநாசம் அணையில் ஓய்வெடுக்கும் முதலை: வைரலாகும் வீடியோ

பாபநாசம் அணையில் முதலை ஒன்று ஓய்வெடுக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த தொடர்மழையால் பாபநாசம் அணை முழு…

பாபநாசம் அணையில் முதலை ஒன்று ஓய்வெடுக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த தொடர்மழையால் பாபநாசம் அணை முழு கொள்ளவை எட்டியது. தற்போது 138.60 அடியாக இதன் நீர்மட்டம் உள்ளது . இந்த அணை நெல்லை, தூத்துக்குடி உள்பட
தென்மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையாக விளங்குகிறது. இந்த அணையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய முதலைகளும் உலா வருகின்றன. அணைபகுதியில் இது குறித்து அறிவிப்பு
எச்சரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அணையின் மேற்பரப்பில் மின்சார அலுவலகம் அருகே முதலை ஒன்று அணையில் இருந்து வெளியேறி படுத்தபடி இருந்துள்ளது. இதை அங்கு சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி
வருகிறது. மேலும் அணையின் அருகில் யாரும் செல்லக் கூடாது என வனத்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டப்போது, பொதுவாக அணையின் நீர்மட்டம் குறைவாக இருக்கும்போது முதலைகள் வெளியில் நடமாடும். ஆனால் அணையில் தற்போது நீர்மட்டம் தொடர்ந்து 138 அடிக்கு மேல் உள்ளது. வெயில் காரணமாக வெளியில் வந்திருக்கலாம் என்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.