முக்கியச் செய்திகள் இந்தியா

’நீங்கதான் திருடர்கள்..’ மகன் பற்றிய கேள்வியால் ஆவேசமான மத்திய அமைச்சர்- வைரல் வீடியோ

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மகன் பற்றி கேள்விகேட்ட பத்திரிகையாளர்களை, நீங்தான் திருடர்கள் என்று மத்திய அமைச்சர் ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் சில மாதங்களுக்கு முன் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த ஊரான திகுனியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக இருந்தது.

அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டுவதற்காக விவசாயிகள் திகுனியா-பல்பீர்பூர் சாலையில் திரண்டனர். அவர்கள் மீது பா.ஜ.கவினர் கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப் பட்டனர்.

அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பாஜகவினா் வந்த காா்களில் ஒன்றில், மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்பட்டதுது. நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம், பத்திரிகையாளர்கள், அவர் மகன் மீதான குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார்.

இதனால் கோபமடைந்த அமைச்சர், இதில், அவமானம் ஏதுமில்லை. குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் தள்ளிய மீடியாவினர்தான் திருடர்கள். உங்கள் தொலைபேசியை அணைத்து விடுங்கள். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? என்று அவேசமாக கூறினார்.

அவர் ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

2K கிட்ஸின் மொழி எமோஜி: உலக எமோஜி தினம்

டிக்கா உத்சவ்: நாடு முழுவதும் 27 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்!

Gayathri Venkatesan

கல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலை விற்றால் சிறை

Halley Karthik