மதுரையில், 5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள டைடல் பார்க்கின் நிலம் தொடர்பான விவரங்களை, விரைவாக அனுப்பி வைக்கும்படி, மதுரை மாநகராட்சிக்கு ஆணையருக்கு, டைடல் பார்க் செயலாக்க இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.
தென்தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில், மதுரை மாட்டுத்தாவணியில் 600 கோடி ரூபாய் மதிப்பிட்டில், முதல்கட்டமாக 5 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், டைடல் பார்க் அமைய உள்ள மாட்டுத்தாவணி பகுதியில், தொழில்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடமும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், டைடல் பார்க் செயலாக்க இயக்குநர், டைடல் பார்க் அமைய உள்ள நிலத்தின் சர்வே எண், பரப்பளவு மற்றும் நிலத்தின் மதிப்பு தொடர்பான விவரங்களை விரைவாக அனுப்பும்படி மதுரை மாநகராட்சிக்கு ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். டைடல் பார்க் அமைய உள்ள நிலம் குறித்து விவரங்கள் இருந்தால்தான், பணிகளை விரைவாக துவங்க முடியும் எனவும் என்றும் அந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.