நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மறுநாள் (நவ.7) தக் லைஃப் படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : #GoldRate | தங்கம் விலை குறைவு… இன்றைய விலை நிலவரம் என்ன?
படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரித்துள்ளன. இப்படத்தின், படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ரஷ்யா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மறுநாள் (நவ.7) காலை 11 மணிக்கு தக் லைஃப் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அப்டேட் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.







