முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மூன்று மாநில சட்டமன்ற தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு

மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலத்திற்கான சட்ட மன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்டுள்ளார்.

 

2023ம் ஆண்டில்  நடைபெற  சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று டெல்லியில் வெளியிட்டார்.  வரும் மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலத்தில் கடந்த  2018ம் ஆண்டு தேர்தல் நடைபெற்று மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வருகிற மார்ச் மாதத்தோடு மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலத்தில் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் அதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திய தேர்த ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு:

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் – பிப்ரவரி 7

வேட்புமனு பரிசீலனை – பிப்ரவரி 8

வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் – பிப்ரவரி 10

வாக்கு பதிவு தேதி – பிப்ரவரி 27

வாக்கு எண்ணிக்கை – மார்ச் 2

திரிபுரா மாநிலத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு:

 

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் – ஜனவரி 30

வேட்புமனு பரிசீலனை – ஜனவரி 31

வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் – பிப்ரவரி 2

வாக்கு பதிவு தேதி – பிப்ரவரி 16

வாக்கு எண்ணிக்கை – மார்ச் 2


மேலும் 6 மாநில இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளையும் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி லட்சத்தீவுகள், அருணாச்சல் மாநிலம் – லும்லா, ஜார்கண்ட் மாநிலம்  -ராம்கர்க், தமிழ்நாடு- ஈரோடு கிழக்கு, மேற்கு வங்கம் -சாஹர்திகி,
மகாராஷ்டிரா மாநிலம் – கஸ்பாபேட் மற்றும் சின்சிவாத் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும். அதன் தேதி விபரங்கள்..

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் – பிப்ரவரி 7

வேட்புமனு பரிசீலனை – பிப்ரவரி 8

வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் – பிப்ரவரி 10

வாக்கு பதிவு தேதி – பிப்ரவரி 27

வாக்கு எண்ணிக்கை – மார்ச் 2

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram