தலை பொங்கலுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்; 10 % கூட சாப்பிட முடியாமல் திணறிய மருமகன்

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையையொட்டி தலை பொங்கலை கொண்டாடிய மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியாருக்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் களைகட்டியுள்ளது.…

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையையொட்டி தலை பொங்கலை கொண்டாடிய மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் களைகட்டியுள்ளது. உலகின் மூலை முடுக்கெங்கும் உள்ள தமிழர்கள் இந்த அதைத்திருநாளை குடும்பத்துடன் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், ஆந்திராவின் எலுரு நகரை சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் என்பவர் தனது மகள் குஷ்மா மற்றும் மருமகன் புத்தா முரளிதர் ஆகியோரை தலை பொங்கலுக்காக விருந்துக்கு அழைத்துள்ளார்.

தலை பொங்கலை கொண்டாடிய புது தம்பதிக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார் தடபுடலாக விருந்து வைத்துள்ளார். அந்த உணவு வகைகளை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த மருமகன் முரளிதர், 379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட சாப்பிடவில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.