ஈரோட்டில் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.
2023ம் ஆண்டில் நடைபெற சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று டெல்லியில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இடைத் தேர்தல் குறித்த தேதிகளையும் அவர் அறிவித்தார். தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ வான திருமகன் ஈவேரா வின் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான் தேர்தல் தேதிகளையும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இடைத் தேர்தல் தேதி பிப்ரவரி 27ம் அறிவிக்கப்பட்ட நிலையில் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். இன்று அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது..
தேர்தல் பார்வையாளர் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் ஈரோடு தேர்தல் பார்வையாளரை நியமிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பறக்கும் படையினர், துணை இராணுவத்தினர் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் உள்ளது. மொத்தம் 2,26,876 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் – 1,10,713, பெண்கள் – 1,16,140, மூன்றாம் பாலினத்தவர் – 23 பேர்.
500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். ஈரோடு நகராட்சி ஆணையர்தான் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சமயங்களில் கொரோனா பாதிப்பு இருந்தால் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் முழுமையாக கடைபிடிக்கப்படும்” என் அவர் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து தலைவர்களின் பெயர்கள், புகைப்படம் ஆகியவற்றை மறைக்கும் பணி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது