உசிலம்பட்டியில் திரைப்பட பாணியில் அதிர்ஷ்ட வைரக்கல் வாங்கி தருவதாக 5 லட்ச ரூபாய் மோசடி செய்த காவலர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளிப்பட்டிணத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் தனது நண்பரிடம் சீரடி சாய்பாபா கோயிலில் வைத்து பூஜித்த வைரக்கல் உள்ளதாகவும், அதை வாங்கி வைத்துக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை நம்பிய சண்முகத்தை 5 லட்சம் ரூபாய் பணத்துடன், உசிலம்பட்டி அருகே புதுராஜா, சார்லஸ் ஆகியோரிடம் சங்கிலி பாண்டி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அதிர்ஷ்ட கல் பறிமாற்றம் நடைபெறும் போது காவலர் சீருடையில் வந்த 2 பேர் சண்முகத்திடம் இருந்த 5 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு சங்கிலி பாண்டி, புதுராஜா, சார்லஸ் ஆகியோரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின்னரே காவலர் உடையில் வந்தவர்களும் மற்ற மூவரும் தன்னை ஏமாற்றியதை அறிந்த சண்முகம் இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அண்மைச் செய்தி: உக்ரைன் போர் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் ஜெய்சங்கர்
வழக்கு குறித்து தனிப்படை அமைத்து விசாரித்த போலீஸார், தொலைபேசி எண்கள் அடிப்படையில் சார்லஸ் மற்றும் புதுராஜா ஆகியோரை கைது செய்து, அவர்களுக்கு உதவியதாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய காவலர் சிவனாண்டி என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய சங்கிலி பாண்டியை தேடி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.