சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை விமான சரக்கு நுண்ணறிவு பிரிவு…

சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை விமான சரக்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகளும் விமான சரக்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக வந்திருந்த பார்சல்களை சோதனை செய்தனர்.

அண்மைச் செய்தி: அதிர்ஷ்ட வைரக்கல் வாங்கி தருவதாக 5 லட்ச ரூபாய் மோசடி செய்த காவலர் உள்பட 3 பேர் கைது

அப்போது சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் நாட்டிற்கு அனுப்ப இருந்த பெட்டிகளை பிரித்து சோதனை செய்த போது பேப்பர் கட்டுகளின் அடியில் போதை பவுடரை மறைத்துக் கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. சூடோபெட்ரின் என்ற வகையைச் சேர்ந்த, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 49.2 கிலோ போதை பவுடரை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.