முக்கியச் செய்திகள் உலகம்

உக்ரைன் போர் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைன் போர் உலகப் பொருளாதாரத்திற்கும், தேசியப் பொருளாதாரத்திற்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷ்ய போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும், இது தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கான அழைப்பை இந்தியா ஆதரிக்கிறது எனவும் தெரிவித்தார்.

ரத்தம் சிந்தி, அப்பாவி உயிர்களை பலி கொடுத்து எந்த தீர்வையும் எட்ட முடியாது என குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையில், எந்த ஒரு பிரச்னைக்கும் அமைதி பேச்சுவார்த்தையே தீர்வாக உள்ளது என சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், உக்ரைன் போர் உலகப் பொருளாதாரம் மற்றும் தேசியப் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். மற்ற நாடுகளையும் போலவே, இந்தியாவும், தாக்கங்களை மதிப்பீடு செய்து, தேசிய நலனுக்கு எது சிறந்தது என்பதை முடிவு செய்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: ‘மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும், போரை உடனடியாக நிறுத்தி வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருநாடுகளுக்கும் இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை இந்திய ஊக்குவிக்கிறது என்றும், இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடி பேசியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

பாமா, சுகிர்தராணி படைப்புகளை பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க  கோரிக்கை

Ezhilarasan

மேம்பால விபத்து; வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Halley Karthik

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா- நடக்குமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

Saravana Kumar