தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பிசியாகி இருந்த பிரகாஷ் ராஜ் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் வரிசையாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
அசுரன் படத்தில் வழக்கறிஞராக நடித்து அசத்திய பிரகாஷ் ராஜ், தீபாவளிக்கு வெளியாகும் 3 படங்களில் நடித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீபாவளியையொட்டி நேற்று வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அதேபோல, சிறுத்தை சிவாவின் ‘அண்ணாத்த’ படத்திலும், விஷாலின் ‘எனிமி’ படத்திலும் நடித்துள்ளார் .
‘அண்ணாத்த’, ‘எனிமி’ நாளை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு மூன்று படங்கள் வெளியாவதால், பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.








