முக்கியச் செய்திகள் சினிமா

ரூ.100 கோடி வசூல்; ‘டாக்டர்’ இயக்குநர் நன்றி

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதற்கு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் உருக்கமுடன் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியான ‘டாக்டர்’ படம் சூப்பர் ஹிட் அடித்து தற்போதுவரை ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடித்துள்ளனர். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடொக்‌ஷனும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்திருந்தது.

‘டாக்டர்’ உலகம் முழுக்க வசூலில் 100 கோடியை தாண்டியது என்று ‘டாக்டர்’ படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், ‘டாக்டர்’ படத்தின் வெற்றிக்காக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.

அதில், “அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தயாரிப்பாளராக நடிகராக மற்றும் ஒரு நல்ல நண்பராக என்னை நம்பிய சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். முழு ஒத்துழைப்பை அளித்த அனிருத் மற்றும் குடும்பமாகவே இருந்த பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு, மிலிந்த் சோமன், ரெட்டின் கிங்ஸ்லி, அர்ச்சனா, இளவரசு, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி.

மேலும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் கேஜேஆர் நிறுவனத்துக்கும் ரசிகர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் எனது நன்றி” என்று நெல்சன் திலீப் குமார் உருக்கமுடன் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

Advertisement:
SHARE

Related posts

கனமழை : தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

Halley karthi

ரேஷன் கடைகளில் புகார் பதிவேட்டை பராமரிக்க உத்தரவு

Gayathri Venkatesan

பிரதமர் மோடி பிறந்தநாள்: கடற்கரையை தூய்மைப்படுத்திய எல்.முருகன், அண்ணாமலை

Ezhilarasan