பால் ஏற்றி வந்த மினி வேன், லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் அருகே பால் ஏற்றி வந்த மினி வேன் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிர் இழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் அலமாதியிலிருந்து மினி வேனில் பால் ஏற்றிக்…

திருவள்ளூர் அருகே பால் ஏற்றி வந்த மினி வேன் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிர் இழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியிலிருந்து மினி வேனில் பால் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்த போது, நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரியில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த வேன் ஓட்டுனர் ராஜேந்திரன், வேனில் வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த உஜால் மற்றும் பப்புமாணிக்கராய் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைதொடர்ந்து, இவ்விபத்து குறித்து  வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு காரணமான லாரியைக் கண்காணிப்பு கேமரா மூலம் தேடி வருகின்றனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.