சென்னை அம்பத்தூர் அருகே தொழிலதிபர் மகனைக் கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பாடியை சேர்ந்த சரவணன், அவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணி இருவரும் அத்திபட்டில் ஆட்டோ மொபைல் கம்பெனி நடத்தி வருகின்றனர். நேற்று இரவு ஆதர்ஷ் சுப்பிரமணி காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, எதிரே ஒரு கார் அவரது காரை மறித்தது. பின்னர் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை அவர்கள் கடத்தி சென்றனர்.
இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் ஆதர்ஷ் சுப்பிரமணி கடத்தி செல்லப்பட்ட கார் பதிவு எண் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காரில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவியின் மூலம், கடத்தப்பட்ட காரை ஆந்திர மாநிலம், காளாஸ்தியில் போலீசார் சுற்றி வளைத்து ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை மீட்டனர்.
அண்மைச் செய்தி: நிறைவேறியது தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கான சட்டமசோதா
கடத்தலில் ஈடுபட்ட செந்தில்குமார், சிலம்பரசன், ஜீவன்பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் விசாரணையில் சரவணனும், செந்தில்குமாரும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. இருவரும் ஆட்டோ மொபைல் தொழிலில் ஈடுபட்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கம்பெனியை மூடிவிட்டனர்.
செந்தில்குமார் தமக்கு சேர வேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கேட்டு ஏற்கனவே சரவணனின் அண்ணன் ராஜசேகரை கடத்தியுளார். இது தொடர்பாக செந்தில்குமார் உள்பட 5 பேர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்தான் மீண்டும்
ஒரு கோடி ரூபாய் கேட்டு ஆதர்ஷ் சுப்பிரமணியை செந்தில்குமார் கடத்தியது தெரியவந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








