திண்டுக்கல்லில் பழக்கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் RM காலனி 9வது கிராஸ் பகுதியில் பழக்கடை மற்றும் உலர் திராட்சை
விற்பனை செய்யும் கடை வைத்திருக்கும் கார்த்திகேயன் தனது நண்பர் சூர்யாவின் ஸ்போர்ட்ஸ் பைக்கை பயன்படுத்தி வந்துள்ளார். கடைக்கு முன்பு நேற்று நள்ளிரவு பைக்கை நிறுத்தி விட்டு, தன்னுடைய அண்ணனுடன் காரில் சென்றுள்ளார்.
அரைமணி நேரம் கழித்து திரும்ப வந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருந்தது. கடை வாயிலில் இருந்த சிசிடிவி பதிவினை ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பைக்கினை எடுத்துக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பைக் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.








