பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 5 மாத சிசு அளவிலான, கட்டியை அகற்றிய அரசு மருத்துவர் குழுவிற்கு குவியும் பாராட்டு.
5 மாத குழந்தை வயிற்றில் இருந்தால் கர்ப்பப்பை எப்படி இருக்குமோ அந்த அளவு பெரிய கட்டி இருந்த பெண்ணிற்கு அரசு மருத்துவர் குழு அறுவைச்சிகிச்சை செய்து, 1400 கிராம் எடை கொண்ட கட்டியை நீக்கிய செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் தீவிர வயிற்று வலி காரணமாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், வயிற்றில், 1400 கிராம் எடை கொண்ட கட்டி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது, ‘5 மாத குழந்தை வயிற்றில் இருந்தால் கர்ப்பப்பை எப்படி இருக்குமோ அந்த அளவு பெரிய கட்டியாக’ இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர் அனுரத்னா தலைமையிலான மருத்துவர் குழு இந்த கட்டியை எப்படி நீக்குவது, என்பது குறித்து ஆலோசனை செய்து பின்னர், கட்டியை நீக்கியுள்ளனர்.
அண்மைச் செய்தி: தொழிலதிபர் மகனைக் கடத்திய மூவர் கைது
இதுகுறித்து மருத்துவர் அனுரத்னா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “நம்ம setupல இவ்வளவு பெரிய அளவு கட்டியை இதுக்குமுன் எடுத்ததில்லை, இப்ப எடுக்க முடியுமா என்ற தயக்கம் ஆரம்பத்தில் இருந்தது எங்க மருத்துவ குழுவினருக்கு
எல்லாவகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, இந்த அறுவைசிகிச்சை வெற்றிகரமா முடிக்கப்பட்டது. கர்ப்பப்பைக்கு மேலே ஒரு சிறு குன்றுபோல் வளர்ந்து இருந்த கட்டி (கர்ப்பப்பையை விட கட்டியின் உயரம் அதிகம்) நல்லபடியா எடுக்கப்பட்டது” என அவர் நெகிழ்ச்சிப்பட தெரிவித்துள்ளார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









