திமுக அரசு ,மத்திய அரசுக்கு எதிராக கருப்பு குடையை கூட விரிக்க தயங்குபவர்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சீர்காழியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும்,மணல் குவாரிகளில் அனுமதி சீட்டு இன்றி மணல் எடுக்கப்படுவதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
பேசுகையில், நாம் தமிழர் கட்சி என்பது மாற்றத்திற்கான கட்சி, குறைகளை கேட்டு
வந்த கட்சி அல்ல, தீர்க்க வந்த கட்சி தமிழகத்தில் தற்போது ஆசிரியர்கள்,
செவிலியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள், போக்குவரத்து
தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்காகவும் வீதிக்கு வந்து போராடி வருகிறது.
ஆனால், தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள் சிறந்த ஆட்சி என்று.
இவர்கள் தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. திமுக
அரசு மத்திய அரசின் கொத்தடிமை , மோடிக்கு எதிராக கருப்பு குடையை கூட விரிக்க
தயங்குபவர்கள், வெளியில்தான் வீரமாக பேசுவார்கள் என கூறினார்.
ஏற்கனவே தமிழகத்தில் போதுமான வசதிகளுடன் விமான நிலையம் இருக்கும் போது
மீண்டும் புதிதாக விமான நிலையம் அமைப்பது தேவையற்றது என அவர் குற்றம்
சாட்டினார். தமிழக அரசு படிக்கும் மாணவிகளுக்கு ரூ 1000, பொங்கல் பணம் ஆயிரம் என வழங்கி தமிழக மக்களை அவமதிப்பு செய்து வருகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி கடந்த 50 ஆண்டு காலமாக தமிழக மக்களை திராவிட கட்சிகள் மாறி மாறி ஏமாற்றி வருகின்றனர்.
நிவாரணம் கேட்டு விவசாயிகள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அரசு உடனடியாக வழங்க
வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண வழங்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் செய்யப்படும் என்றார். இந்தக் கோரிக்கையை ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி ,மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.