குடித்ததோ 150 ரூபாய்; ஆனால் அபராதம் விதிப்பதோ 20,000 ரூபாயா? என்று போலீசாருடன் வாக்குவாதம் செய்த இளைஞர்களால் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மது அருந்தி வந்த இருசக்கர வாகன
ஓட்டிகளிடம் அபராதம் விதித்த போலீசாரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திருவொற்றியூர் பகுதிக்கு நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு மது அருந்திக்கொண்டு புதுவண்ணாரப்பேட்டை அருகே வீட்டிற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தை மடக்கிய போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்கள் மது அருந்தி இருந்ததால் அபராதம் விதித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் நாங்கள் சரக்கு அடித்ததே 150 ரூபாய்க்கு தான் ஆனால் அபராதமோ 20000 என்றால் எங்களால் எப்படி பணத்தை செலுத்த முடியும். அடிக்கடி இதுபோன்று அவரது விதித்து கொண்டே இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் சூழவே உடனடியாக காவல் கட்டுப்பாட்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு
சம்பவ இடத்திற்கு வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் வாக்குவாதம் ரகளையிலும் ஈடுபட்டிருந்த இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு குடிபோதையில் இருந்ததால் எழுதி வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பினர்.
மேலும் பரபரப்பான திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் இளைஞர்கள் குடிபோதையில்
போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டதால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது







