விஜய் அரசியலுக்கு வருவது குறித்து, கடவுளுக்குத்தான் தெரியும் -ஷோபா சந்திரசேகர்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து, கடவுளுக்குதான் தெரியும் என அவரது தாயார் ஷோபா கூறியுள்ளார். பிரசித்திபெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு, நடிகர் விஜயின் தாயார் ஷோபா சாமி தரிசனம் செய்தார். பின்னர்…

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து, கடவுளுக்குதான் தெரியும் என அவரது தாயார் ஷோபா கூறியுள்ளார்.

பிரசித்திபெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு, நடிகர் விஜயின் தாயார் ஷோபா சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்ததாகவும் உலகமே சமாதானமாகவும், சந்தோஷமாகவும் ,நோய் நொடியின்றி இருக்கணும் என்பதற்காக தான் சுவாமி தரிசனம் செய்ய வந்தேன்.

ரொம்ப நேரம் காமாட்சியம்மன் அபிஷேகங்களை கண்டு தரிசனம் செய்தது சந்தோஷமாக,இருக்கிறது. எல்லாரும் வேண்டிக்கங்க விஜய் நடித்து வெளிவர இருக்கின்ற வாரிசு திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என எல்லாரும் வேண்டிக்கங்க என்று பேசினார்.

மேலும் செய்தியாளர்கள் வாரிசு படத்தின் கேரக்டர் பற்றியும் , அடுத்த படம்
எந்த மாதிரி கேரக்டர் நடிக்க உள்ளார் என கேட்டதற்கு,  அவர் இந்த படத்திலேயே எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்று தெரியாது நீங்கள் அடுத்த படத்தை பற்றி கேட்கிறீர்கள் இந்த படத்தில் அவர் பேமிலி சென்டிமென்ட் கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறினார் .


பின்னர் அரசியல் வருவதைப் பற்றி கேட்டதற்கு,  எனக்கு அதபத்தி  ஒன்னுமே தெரியாது. விஜய் என்ன டிசைட் பண்றாரோ கடவுள் என்ன நினைக்கிறாரோ எனக் கூறிவிட்டு பேட்டி முடித்துக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.