முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசை குறைகூற முடியாதவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- முதலமைச்சர்

திமுகவின் சாதனைகளை பொறுக்க முடியாத சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பில் திருமண விழா நடைபற்றது. இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் தாலி உடன் 70,000 மதிப்பிலான 30 சீர்வரிசை பொருட்களும் வழங்கபட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்படத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைப்பது எனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. முதலமைச்சர் தான் அமைச்சரை வேலை வாங்குவார், ஆனால் முதல்வரை வேலை வாங்கும் அமைச்சராக அமைச்சர் சேகர்பாபு உள்ளார். இதுவரை அறநிலையத்துறை 3700 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.


மேலும், சமத்துவத்தை விரும்பாத சில சக்திகள் மூலமாக எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்ட போராட்டத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இச்சாதனைகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செய்துள்ளோம். இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

அதனால் தான் அவர்கள் பொய், பித்தலாட்டத்தை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. திமுகவின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாத சிலர், மதத்தை வைத்து பழிகளையும், குற்றங்களையும், பரப்பிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

அதே போல, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என செயல்பட்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் இன்று 217 பேருக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய பெருமை நமக்கு தான் உண்டு என்றும் தெரிவித்தார்.

நாம் இருவர் நமக்கு மூவர் என்ற நிலை மாறி தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம். மேலும் வருங்காலத்தில் நாம் இருவர் நமக்கு ஏன் மற்றொருவர் என்ற நிலை வர கூடும் என்று எச்சரித்தார். அது மட்டுமல்ல நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை என்று கூட நான் விளம்பரம் ஒன்றை பார்த்தேன் என்று கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

மத்திய அரசும், மாநில அரசும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அதிக அளவில் செலவு செய்து வருகிறது. இவையெல்லாம் கருதி நாட்டின் நலன் கருதி, வீட்டின் நலன் கருதி அளவுடன் குழந்தை பெற்று அழகு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், தா.மோ.அன்பரசன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’அடுத்த ஆண்டு ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

EZHILARASAN D

பிரிவினை அரசியல் செய்யும் கர்நாடக அரசு: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Arivazhagan Chinnasamy

வகுப்புகளில் மாணவர்களை சேரச் சொல்லி மிரட்டுவதாக புகார்: பைஜூஸ் நிறுவன சிஇஓக்கு சம்மன்

Web Editor