முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய கடற்படை தினம்; பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய கடற்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி கடற்படையினருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை ஆற்றிய சிறந்த பங்கை அங்கீகரிப்பதற்காகவும், ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ போர் நடவடிக்கையின் சாதனைகளை நினைவுகூரவும், கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு முப்படை தளபித அனிஸ் சௌஹான், கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார், விமானப்படை தளபதி வி.ஆர்.சௌத்ரி, துணைராணுவ தளபிதி பி.எஸ்.ராஜு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய கடற்படை நமது நாட்டை உறுதியாக பாதுகாத்து வருகிறது. சவாலான காலங்களில் இந்திய கடற்படை தனது மனிதாபிமான உணர்வால் தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சபரிமலை பயணம் தானப்பா…. என் வழி துணையா வந்து சேருப்பா…..

NAMBIRAJAN

பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் பயங்கரவாதிகள்: ரவிக்குமார் எம்.பி

Arivazhagan Chinnasamy

வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது; பிரதமர் மோடி உறுதி!

Dhamotharan