பக்தி செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே தொரட்டைய்யனார் கோயில் குடமுழுக்கு விழா!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொரட்டைய்யனார் கோயில்
குடமுழுக்கு பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சுந்தரபுரி பாமணி கிராமத்தில்
அருள்மிகு தொரட்டைய்யனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கடந்த 23ஆம்
தேதி முதல்கால பூஜையுடன் துவங்கி, இன்று நான்காம் கால பூஜை, விநாயகர்
வழிபாடு, கோ பூஜை மற்றும் மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து,
தீபாரதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது.

மேலும், வேத மந்திரங்கள் முழங்க, கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு கும்பத்திற்கு
புனித நீர் ஊற்றி குடமுழக்கு விழா நடைபெற்றது. இந்நிலையில், பக்தர்கள் மீது புனித
நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, குறட்டை அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு
தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மூன்று மாநில சட்டமன்ற தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு

Jayasheeba

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை: இரவு 12 மணி வரை மெட்ரோ சேவையை நீட்டித்த நிர்வாகம்

Web Editor

உச்சநீதிமன்ற வழக்கு குறித்த பணிகள் உள்ளதால் இபிஎஸ்-ன் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து?

Web Editor