ரியல்மீ நிறுவனத்தின் விளம்பர தூதராக ஷாருக்கான்!

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானை, ரியல்மீ இந்தியா ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது விளம்பர தூதராக அறிவித்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ தனது புதிய தயாரிப்புகளான ரியல்மீ 11 ப்ரோ மற்றும் ரியல்மீ 11…

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானை, ரியல்மீ இந்தியா ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது விளம்பர தூதராக அறிவித்துள்ளது.

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ தனது புதிய தயாரிப்புகளான ரியல்மீ 11 ப்ரோ மற்றும் ரியல்மீ 11 ப்ரோ+ ஆகியவற்றை, சீனாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் மாதம் இந்தியா உட்பட சர்வதேச சந்தைகளில் அறிமுகமாக உள்ளன.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் பாட்ஷா, சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஷாருக்கானை, இந்தியாவில் ரியல்மீ நிறுவனத்தின் புதிய விளம்பர தூதராக இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து ஷாருக்கான் கூறியதாவது, “ரியல்மீ இன் ‘டேர் டு லீப்’ தத்துவம் என்னை மிகவும் ஈர்த்தது. இந்த நிறுவனத்தின் எல்லைகளைத் தாண்டிய அசைக்க முடியாத சாதனை, எனது சொந்த சிறப்புடன் ஒத்துப்போகிறது. உலகளவில் ரியல்மீயின் வளர்ச்சியை அதிகரிப்பதே நோக்கமாக கொண்டுள்ளோம். நான் ரியல்மீ நிறுவனத்தின் தூதரானதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் சவால்களை ஏற்றுக்கொள்ளவும், அவற்றை தைரியமான எதிர்கொள்ளவும் ஊக்குவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

 

ஷாருக்கான் இந்தியாவில் விளம்பரப்படுத்தும் முதல் தயாரிப்பு ’ரியல்மீ 11 ப்ரோ 5G மொபைல்கள்’ என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மீ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்காக பாலிவுட் நடிகருடன் கைகோர்ப்பது இது முதல் முறை அல்ல. 2020 ஆம் ஆண்டில், ரியல்மீ 6 போனுக்காக சல்மான் கானும், மேலும் ரியல்மீ 6 போனின் வேறு சில தயாரிப்புகளுக்காக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருடனும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.