நிஜ பார்பியாக மாற ஆசை – ரூ.82 லட்சம் செலவு செய்து சிகிச்சை மேற்கொண்ட ஆஸ்திரேலிய பெண்!!

பார்பி பொம்மையை போல் மாற வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் ரூ.82 லட்சத்தை செலவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பெண் குழந்தைகள் பெரிதும் விரும்பும் பொம்மைகளில் பார்பியும் ஒன்று. விதவிதமான நிறத்திலும்,…

பார்பி பொம்மையை போல் மாற வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் ரூ.82 லட்சத்தை செலவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பெண் குழந்தைகள் பெரிதும் விரும்பும் பொம்மைகளில் பார்பியும் ஒன்று. விதவிதமான நிறத்திலும், ஆடை வடிவமைப்புடனும் இருக்கும் பார்பி பொம்மைகளை வாங்கி விளையாட குழந்தைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பார்பி பொம்மைகளுடன் விளையாடுவது 90s கிட்ஸ்களின் கனவு என்றே கூறலாம்.

அந்த பார்பி பொம்மையை போலவே தானும் மாற வேண்டும் என்று பெண்கள் விரும்பி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், பார்பி பொம்மையை போல் மாற வேண்டும் என்பதற்காக ரூ.82 லட்ச செலவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் குயிண்ஸ்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் ஃபாரஸ்ட். 25 வயதாகும் இவர், பார்பி பொம்மையைப் போலவே மாற வேண்டும் என்பதற்காக 1 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 82 லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

தனது 18வது வயதில் மார்பகத்தை பெரிதாக்குவதற்காக ’ப்ரெஸ்ட் ஆக்மெண்டேஷன்’ அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இவர், பின்னர் 24வது வயதில் அதே அறுவை சிகிச்சையை மீண்டும் மேற்கொண்டார். தொடர்ந்து கை, வயிறு, முதுகு, தொடை, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தசைகளை இறுகச் செய்யும் வாசர் லைபோசக்‌ஷன் சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். பிளாஸ்டிக் சர்ஜெரிகளும் செய்துகொண்டுள்ளார்.

https://www.instagram.com/reel/CsaLJu6LqYS/?utm_source=ig_web_copy_link&igshid=MmJiY2I4NDBkZg==

இதுகுறித்து பேசிய ஜாஸ்மின், “ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்குப் பின்னரும், ஆண்கள், பெண்கள் என இருபாலராலும் சிறப்பாக நடத்தப்படுகிறேன். அதே நேரம் என்னுடைய தன்னம்பிக்கையின் அளவும் உயர்ந்து வருகிறது. ஒரு நாளில் நான் குளிப்பதற்கு முன்னர் இருமுறை என்னுடைய உடலை பார்ப்பேன். பல்துலக்கும்போது என்னுடைய முகத்தை பார்ப்பேன். அது என்னுடைய சுய மரியாதையை மேம்படுத்த உதவுகிறது. இந்த உலகம் கண்களால் பார்க்கக்கூடிய நம்முடைய உடலுக்கும் முகத்தும் செலவு செய்வது ஏற்புடையதுதான்’ என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.