தூத்துக்குடியில் மீன்கள் விலையில் கடும் சரிவு!

தூத்துக்குடியில் புரட்டாசி மாத பிறப்பு மற்றும் குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழா உள்ளிட்ட காரணங்களால் வரத்து குறைந்துள்ள போதிலும் மீன்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் அதிகளவில் உள்ளனர். இங்கிருந்து…

தூத்துக்குடியில் புரட்டாசி மாத பிறப்பு மற்றும் குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழா உள்ளிட்ட காரணங்களால் வரத்து குறைந்துள்ள போதிலும் மீன்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் அதிகளவில் உள்ளனர். இங்கிருந்து தான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மீன்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.மீனவர்கள் சிறிய படகுகள் முதல் பெரிய படகுகள் வரை பயன்படுத்தி மீன்களை கடலுக்கு சென்று பிடித்து வந்து விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் அசைவம் தவிர்க்க கூடிய மாதமான புரட்டாசி பிறந்துள்ளதாலும், உலகப்புகழ் பெற்ற குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலுக்கு பக்தர்கள் மாலையணிந்து விரதமிருக்க தொடங்கி உள்ளதாலும் இறைச்சி விற்பனையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் தூத்துக்குடி திரேஸ்புரம் துறைமுகத்திற்கு மீனவர்கள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள மீன்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் காற்று காரணமாக குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ள போதிலும் மீன்களின் விலையில் பெயரளவிற்கு கூட முன்னேற்றமில்லை.

கடந்த மாதம் வரையில் கிலோ 1200க்கு விற்பனை செய்யப்பட்ட சீலா மீன் தற்போது 800 வரையில் மட்டுமே விற்பனையாகிறது.இதைபோல் 500க்கு விற்பனையான விளை மீன்கள் 350 வரையிலும்,நெத்திலி ஒரு கூடை மூவாயிரம் வரையில் விற்பனையான நிலையில் தற்போது 2000 வரையில் மட்டுமே விற்பனையாகிறது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.