கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்குவதற்காக அவரது இரண்டரை வயது குழந்தையை கொன்று வீட்டிலுள்ள ஸ்பீக்கரிலேயே மறைத்த காமக்கொடூர கொழுந்தன் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலபந்தல் கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி-ஜெகதீஷ்வரி தம்பதி. இவர்களது இரண்டரை வயது குழந்தை திருமூர்த்தி கடந்த 17ம் தேதி வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தப்போது காணாமல் போனார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததல் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி திருப்பாலந்தல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் குழந்தையை தொலைத்திருந்த ஜெகதீஷ்வரிக்கு ஆறுதல் சொல்வதற்காக அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது பெண் ஒருவர் அங்கிருந்த ஸ்பீக்கர் பெட்டியை எதேச்சையாக தள்ளிவிட்டத்தில் அதன் இடைவெளியில் குழந்தையின் கை தெரிந்தது.
இதனால் பதறிய ஜெகதீஷ்வரி உறவினர்களின் உதவியோடு ஸ்பீக்கரை திறந்து பார்த்த போது அதனுள் குழந்தையின் சடலம் இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக குருமூர்த்தியின் சகோதரர்கள் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் தலைமறைவானார். அவர் நேற்று திருப்பாலபந்தல் கிராம நிர்வாக அலுவரிடம் சரணடைந்தார். அவரை கைது செய்து விசாரித்ததில் பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வரும் தனது அண்ணன் மற்று அப்பாவிற்கு உதவி செய்வதற்காக பெங்களூருக்கு சென்றதாகவும், அப்போது வீட்டிற்கு வருகையில் தனது அண்ணன் மனைவி ஜெகதீஷ்வரி மீது ஆசை கொண்டதாகவும், இதுகுறித்து பலமுறை அவரிடம் கேட்ட போதும் அவர் இணங்க மறுத்ததால் அவரை பழிவாங்குவதற்காக அவரது கொலையை கொன்று ஸ்பீக்கரில் மறைத்ததாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ராஜேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தனது அண்ணி மீது கொண்ட தவறான எண்ணத்திற்கு அவர் உடன்படாததால் அவரை பழிவாங்க இரண்டரை வயது குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேந்தன்







