தூத்துக்குடி மாவட்டத்தில் களைகட்டிய திருவிழாக்கள் – காய்கறி விலை கடும் உயர்வு

தூத்துக்குடியில் தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதால் காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு…

தூத்துக்குடியில் தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன்
ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதால் காய்கறி
சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.  இதனால்,  சந்தையில் காய்கறி  விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  அவரைக்காய் கிலோ 120 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரையும்,  பீன்ஸ் கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 70 ரூபாய் வரை விற்பனை ஆகி வருகிறது.

தூத்துக்குடி காய்கறி சந்தையில் வழக்கத்தை விட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  கிலோவிற்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்படுகிறது.

வெண்டைக்காய் கிலோ 50 ரூபாய் வரையும்,  சீனிஅவரைக்காய் கிலோ 60 ரூபாய் வரையும்,  உருளைக்கிழங்கு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரையும், கேரட், சௌசௌ ஆகியவை கிலோ 30 ரூபாய் வரையும் விற்பனை ஆகிறது.

தக்காளி வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் கிலோ பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை விற்பனை செய்யப்படுகிறது.  இஞ்சி கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது.  இந்த விலை உயர்வு தசரா திருவிழா முடியும் வரை இருக்கும் என்று
வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.