முக்கியச் செய்திகள் விளையாட்டு

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்; பதக்கத்தை உறுதி செய்தது இந்திய அணி

இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி, தாமஸ் கோப்பை காலிறுதியில் மலேசியாவை வீழ்த்தி முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதனால், தாமஸ் கோப்பை காலிறுதியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. முன்னதாக பாங்காக்கில் நடந்த உபெர் கோப்பையில் தாய்லாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து பெண்கள் அணி. இந்நிலையில், இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி 43 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தாமஸ் கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைவதற்கு மலேசியாவை 3-2 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றுள்ளது.

இதனால் தாமஸ் கோப்பையில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலம் உறுதியாகியுள்ளது. 1979-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போட்டியில் இந்திய அணி பதக்கம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1-வது போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென், மலேசியாவின் லீ ஜியாவிடம் 23-21, 21-9 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். 2-வது போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபே மற்றும் நூர் இசுதீனை 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, மலேஷியாவின் நாங் டிசே யோங்கை 21-11, 21-17 என்ற செட்களில் விழ்த்தி இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.

அண்மைச் செய்தி: ‘மணிகண்டனின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும்: அண்ணாமலை’

4-வது ஆட்டத்தில் இந்திய ஜோடி கிருஷ்ண பிரசாத் மற்றும் விஷ்ணுவர்தன், மலேஷியாவின் ஆரோன் சியா மற்றும் தியோ ஈ யியை எதிர்த்து விளையாடிது. இதில் ஆரோன் சியா மற்றும் தியோ ஈ யி ஜோடி 21-19, 21-17 என்ற கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது. எனினும் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் மலேஷியாவின் லியோங் ஜுன் ஹாவை தோற்கடித்தார்.

தாமஸ் கோப்பை காலிறுதியில் மலேசியாவை வீழ்த்தி முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளதால், 43 ஆண்டிற்கு பிறகு தனது முதல் தாமஸ் கோப்பை பதக்கத்தை தற்போது, இந்திய அணி பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

பெண்களை ஈவ் டீசிங் செய்த இளைஞர்: தட்டிக்கேட்ட நபருக்கு கத்திக்குத்து!

Jayapriya

ராஜேந்திர பாலாஜி கைது செய்வதில் காவல்துறை அவசரம் காட்டியது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி

Saravana Kumar

குழந்தை தொழிலாளர்களாக பணியாற்ற வந்த சிறுவர்கள் மீட்பு

Saravana Kumar