முக்கியச் செய்திகள் மழை

தென்மேற்கு பருவமழை 15ம் தேதி தொடங்க வாய்ப்பு!

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே, 15-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென்மேற்கு பருவமழை, இந்தியாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 4 மாதங்களில் பெய்யும் பருவமழையாக உள்ளது. இந்த பருவ காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட தென் மாநிலங்களில், ஒவ்வொரு ஆண்டும் நல்ல மழை பெய்யும். இதனால், நீர்நிலைகள் நிரம்பும். இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே, 15-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மே 4-ஆம் தேதி தொடங்கி அக்னி நட்சத்திரம் மே 28-ஆம் தேதி வரை இருக்கும் என்பதால் மிகப்பெரிய அளவில் அனல் காற்று வீசும் எனவும், இதனால் அதிக அளவில் வெப்பம் இருக்கும் எனவும் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஓரிரு நாட்களாகவே, அசானி புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

அண்மைச் செய்தி: ‘தாமஸ் கோப்பை பேட்மிண்டன்; பதக்கத்தை உறுதி செய்தது இந்திய அணி’

மேலும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 13, 14 தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் கோரப்பிடியில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிகொள்வார்கள் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

டிடிவி தினகரன், கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல்!

Jeba Arul Robinson

எழுவர் விடுதலை; தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Arivazhagan CM

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்போது வெளியாகும்?

Vandhana