முக்கியச் செய்திகள் தமிழகம்

மணிகண்டனின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும்: அண்ணாமலை

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயன்பெற அதிகாரி லஞ்சம் கேட்டு இழுத்தடித்ததால் மணிகண்டன் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நன்னிலம் அருகே கமுகக்குடி எனும் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட முயன்றுள்ளார். அதற்கு அதிகாரி லஞ்சம் கேட்டு இழுத்தடித்ததாகக் கூறி வீடியோ வெளியிட்ட அந்த இளைஞர், பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.

இளைஞர் மணிகண்டனின் தற்கொலையை அடுத்து, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, அப்பாவி உயிர் பலியான பிறகு லஞ்சம் கேட்ட மேற்பார்வையாளர் மகேஸ்வரன், தற்காலிகமாக பணியிடை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது யாருக்கோ எங்கோ நடந்த சம்பவம் அல்ல என்று தெரிவித்துள்ள அவர், நாளை நமக்கு நடக்கப் போகும் சம்பவத்திற்கான முன்னெச்சரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகள் அச்சமின்றி லஞ்சம் கேட்கத் தொடங்கி இருப்பதாகவும், காவல்துறையின் கைகள் ஆளும் கட்சியினரால் கட்டப்பட்டுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடைபெறுகிறது என்றும், தற்போதைய தமிழக அரசு ஊழலில்தான் நம்பர் ஒன்றாக உள்ளதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இளைஞர் மணிகண்டனின் உயிரிழப்புக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

இறையன்பு ஐ.ஏ.எஸ் பற்றி தெரிந்தகொள்ளவேண்டிய விஷயங்கள்!

புதுச்சேரியில் என். ஆர். காங் -பாஜக கூட்டணி உறுதி!

Jeba Arul Robinson

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்: அமைச்சர் சொன்ன தகவல்

Ezhilarasan