முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

காணொலி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில், நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்த விரிவான விவாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. அதே நேரம், சாலை போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களால் முடிக்கப்பட்ட பணிகள் குறித்த ஆய்வும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்களுடன் அவர்களது அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து தற்போது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அமைச்சர்களின் துறையில் மாற்றம், விரிவாக்கம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

திமுகவிற்கு கொடுத்து பழக்கமில்லை எடுத்துதான் பழக்கம் – முதல்வர் விமர்சனம்

Gayathri Venkatesan

இங்கிலாந்தை மிரட்டும் புதியவகை கொரோனா; இந்தியாவில் இன்று அவசர கூட்டம்!

Jayapriya