இந்த நாடு சனாதன தர்மம் உடையது என்றும், அது எல்லாரும் நலமாக, நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
அகில பாரத வழக்கறிஞர் சங்கம் சார்பில் இந்திய அரசியல் அமைப்பு நாள் விழா சென்னையில் எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இன்று விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி. நீங்கள் எல்லோரும் அறிவு சார்ந்த மக்களாக உள்ளீர்கள். ஒட்டு மொத்த இந்தியர்கள் புனித நூலாக அரசியல் அமைப்பு உள்ளது. 2047ஆம் ஆண்டு நாம் இந்தியா சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு விழாவை கொண்டாடப் போகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் அரசியல் அமைப்பு சட்டம், நாட்டிற்கு வளர்ச்சியை கொடுக்கும்.
இந்தியா என்றால் பாரதம். பாரதம் என்றால் என்ன? இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டது. 2500 ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர் நாடு முழுவதும் பல ஆசிரமங்களை உருவாக்கினார். அவர் பல கருத்துக்களை மக்களிடம் கொடுத்தார். 700 ஆண்டுகள் முன் மஹா ஷங்கர் தேவ், 119 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து, பல ஊர்கள் சென்று, பாரத பூமி என்று பேசியுள்ளார்.
பாரதத்தில் இருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் ஒருவர் சென்று
சீனர்களுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்துள்ளார். அவர் தான் போதி தர்மர். அவருக்கு சீனர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். பாரதம் என்ற சொல்லில்,
பா என்றால் ஒளி, ரதம் என்றால் நிலம் என்று அர்த்தம். இதைத் தான் பாரதம் என்று சொல்கிறோம். நாம் பாரதம் பற்றி தெரிந்து கொள்ள பல விஷயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பாரதம் என்பது ஆன்மிகம், கலாச்சாரம் நிறைந்த பூமி. இந்த நாடு சனாதன தர்மம்
உடையது. அது எல்லாரும் நலமாக இருக்க வேண்டும். நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறது. நம் அரசியல் அமைப்பு மதச்சார்பின்மை என்று சொல்கிறது. அது அப்படியே அகராதியில் உள்ளபடி சொல்வது இல்லை.
300 ஆண்டுகளுக்கு முன் இந்தியா தான் பொருளாதார ரீதியில் முதல் நாடாக இருந்தது. பொருளாதாரம் மட்டும் அல்ல. அறிவுப்புர்வமாகவும் இந்தியர்கள் அப்படி தான் இருந்தார்கள். அவர்களது நாகரிகம், தொழில், ஏற்றுமதி உள்ளிட்டவை அந்த அளவுக்கு
உயர்ந்து இருந்தது. இந்த வளர்ச்சிக்கு ஆங்கிலேயே அரசு தான் தடையாக அமைந்தது. மதத்தின்மூலம் நம்மை பிளவுபடுத்தியது ஆங்கிலேய அரசுதான்” என்று பேசினார்.